“எங்க அப்பாவும் – விஜயகாந்தும் பிரிந்ததற்கு உண்மையான காரணம் இது தான்”.. பல வருட கேள்விக்கு விடை கொடுத்த ரவுத்தரின் மகன் அபுபக்கர்..

By admin on மார்கழி 31, 2023

Spread the love

சமீபத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க முயற்சித்த காலத்தில், அவருக்கு பக்கபலமாக கேப்டனுடன் எப்போதுமே இருந்த நண்பர். அதனால்தான் தனது ஆருயிர் நண்பனை, தயாரிப்பாளராக்கி ராவுத்தர் பிலிம்ஸ் என படங்களை தயாரித்தார் விஜயகாந்த். இப்ராகிம் ராவுத்தர்தான் விஜயகாந்துக்கு பிரேமலதாவை திருமணம் செய்து வைத்தவர்.

ஆனால், அவர் திருமணம் செய்யாமலேயே கடைசி வரை வாழ்ந்து மறைந்துவிட்டார். அவரது தம்பி மகன் அபுபக்கரை ஒரு வயது குழந்தையாக இருந்த போதே, தனது வளர்ப்பு மகனாக வளர்த்து வந்தார் ராவுத்தர். விஜயகாந்த் மறைவு, ராவுத்தர் நட்பு குறித்து அவரது வளர்ப்பு மகன் அபுபக்கர் நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

   

   

அவர் கூறியதாவது, விஜயகாந்த் கோபப்படுவார். ஆனால் அது நியாயமான கோபமாக இருக்கும். யாரையும் காயப்படுத்துவது அவரது கோபத்தின் நோக்கமாக இருக்காது. ஒழுங்காக இருக்க வேண்டும், ஒழுக்கமாக வாழ வேண்டும் என ஒழுக்கம் சார்ந்த கோபத்தை தான் அவர் காட்டுவார். என் மீதும், சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் மீது கூட அவர் கோபம் காட்டியதுண்டு. அது நாங்கள் நன்றாக ஒழுக்கமாக வளரவேண்டும் என்பதற்காக தான்.

 

ராவுத்தரும், கேப்டனும் ஒன்றாக சேர்ந்து சீட்டு விளையாடுவார்கள். படம் பார்ப்பார்கள். சாப்பிடுவார்கள். ஜோக்கடித்து சிரித்துக்கொள்வார்கள். அவர்கள் வாடா போடா என தனிமையில் இருக்கும்போது பேசிக்கொண்டாலும், மற்றவர்கள் முன்னிலையில், அவர் இவர் என்ற மரியாதையை வெளிப்படுத்துவார்கள். ஒருமையில் குறிப்பிட்டு பேச மாட்டார்கள்.

என் பாட்டி, ராவுத்தரை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தியதால், அவரது தம்பி மகனான என்னை ஒரு வயதிலேயே மதுரையில் இருந்து சென்னைக்கு தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். இவன்தான் என் மகன் என, அவர்தான் என்னை வளர்த்தார். படிக்க வைத்தார். ஆளாக்கினார். ராவுத்தர் பிலிம்ஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்ய சொல்லிக்கொடுத்தார். கேப்டனுக்கும், அப்பாவுக்கும் எதிர்ப்பு, வாய்த்தகராறு, சண்டை என எதுவும் கிடையாது.

இருவருக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டது. சரி, இனி சேர்ந்து இருக்க வேண்டாம் என இருவரும் புரிந்துக்கொண்டு பிரிந்துவிட்டனர். ஆனால் அப்பாவிடம் பேசாமல் எல்லாம் இருந்தது இல்லை. அப்பா இறந்த போது வந்த கேப்டன், எதுவாக இருந்தாலும் என்னிடம் வா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் கூறினார் என்று அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் இப்ராகிம் ராவுத்தர் வளர்ப்பு மகன் அபுபக்கர்.