சினிமாவில் வந்த வேகத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் வீடு திரும்பிய பல நடிகர்கள் உண்டு.. ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் சினிமா மட்டும் தான் வாழ்க்கை என நம்பி எப்படியேனும் சினிமா நம்மை தூக்கி விடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த நடிகர்களில் போண்டா மணியும் ஒருவர். இன்றைய சினிமாவில் தான் நகைச்சுவை நடிகர்கள் தனியே அல்லது ஹீரோவுடனேயே இருக்கும் படியாக நடிக்கின்றனர். ஆனால் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோர் தங்களை சுற்றி ஒரு வட்டாரத்தை வைத்துக் கொண்டு அவர்களோடே பயனிப்பர். அப்படி வைகைப்புயல் வடிவேலுவின் கேங்கில் பயனித்த நடிகர் தான் போண்டா மணி.

#image_title
கேதீஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்டவர் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து, சினிமாவின் மீது கொண்ட பற்றால் 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படம் மூலம் சினிமவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்தவர் பின்னாளில் வடிவேலுவின் கேங்கில் ஒருவரானார். கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், கடந்த வருடம் சிறுநீரக கோளாறால் அவதியுற்று மருத்துவமனையில் அனுமதியானார். திரைப்பிரபலங்களிடம் உதவி கோரியிருந்தவருக்கு மிக நெருக்கமான வடிவேலு சிறு உதவிக் கூட செய்யவில்லை என்று பின்னாளில் அவரே வருத்தப்பட்டு பல நேர்காணல்களில் கூறியிருந்தார்.

#image_title
அதன் பிறகு வடிவேலுவுடன் கூட்டணியில் இருந்த ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களும் வடிவேலுவை பற்றி பல கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், உடல்நிலையில் தேறி வந்த போண்டா மணி, மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு 24-ம் தேதி உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தப் போதும், நிதியுதவி கேட்டப்போதும் எட்டிக் கூட பார்க்காத நடிகர் வடிவேலு, போண்டா மணியின் இறப்பில் கூட கலந்து கொள்ளாதது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் போண்டா மணி மட்டும் இல்லை. பலரது இறப்பின் இறுதி அஞ்சலியில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை, கலந்துகொள்ளவும் மாட்டார். ஏன் என்று அதை நீங்கள் அவரை தான் கேட்க வேண்டும், ஆனால் கண்டிப்பாக அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் கூறியுள்ளார்.

#image_title
