அஜித்தின்’ ராஜா’ பட நடிகையா இது..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..

By Begam on மார்கழி 22, 2023

Spread the love

தமிழ் சினிமா சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்பொழுது இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் 2002ல் வெளியான ‘ராஜா’ திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியங்கா.

   

இவர் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். 1998 இல் பெங்காலி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், இதைத் தொடர்ந்து ஹிந்தி ,ஒடிசா, தெலுங்கு ,கன்னடா என பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 2002இல் வெளிவந்த ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் கால் பதித்தார்.

   

 

இதை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் ‘ராஜா’, விக்ரமுடன்  ‘காதல் சடுகுடு’, ஐஸ் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக இவர் தமிழில் 2004 இல் வெளிவந்த ‘ஜனனம்’ என்று திரைப்படத்தில் நடித்திருந்தார். 2004 ஆம் வருடத்திற்கு பிறகு இவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. ஆனாலும் கன்னடம் மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் தற்போது வரை நடித்து வருகிறார்.

இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை 2003ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஐஸ்வர்யா உபேந்திரா மற்றும் ஆயுஷ் உபேந்திரா என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .நடிகை உபேந்திரா ஒரு நடிகை மட்டுமல்ல ,ஒரு டாக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தற்பொழுது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய படுவைரலாகி வருகிறது.