2023-ல் லியோ, ஜெயிலரை தாண்டி மக்களை திரும்பிப்பார்க்க வைத்த படங்கள்.. தரமான சம்பவம் செய்த ‘போர் தொழில்’..

By Begam on மார்கழி 20, 2023

Spread the love

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் இந்த ஆண்டில் சாதித்து காட்டியுள்ளது .ஜெயிலர் ,லியோ எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோ,  அதேபோல இந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு சில திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.  அத்திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

போர் தொழில்:

   

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இந்த வருடம் வெளியான சிறிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்று போர் தொழில். இத்திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் நடிகர் சரத்குமார் தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். த்ரில்லர் பட பாணியில் போலீஸ் அதிகாரிகள் எவ்வாறு கொலையாளிகளை எவ்வாறு கண்டுபிடிக்கின்றனர் என்பது குறித்து வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பாராட்டையும் பெற்றது.

   

 

ஜிகர்தண்டா 2 :

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ஜிகர்தண்டா 2. ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது . இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இத்திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் தங்களது கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

விடுதலை பகுதி 1:

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி ஹீரோவாக களமிறங்கிய திரைப்படம் தான் விடுதலை.  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி தங்களது நடிப்பால் மிரட்டி இருந்தனர். ஒரு பழங்குடி கிராமத்தைப் பற்றிய கதையை மிகவும் நேர்த்தியாக இயக்குனர் திரைப்படத்தில் கையாண்டிருப்பார். தற்போது இத்திரைப்படம் இந்த வருட ரோட்டார் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குட் நைட்:

குறட்டை பிரச்சனையால் ஏற்படும் கஷ்டங்களை பற்றி மிகவும் அழகாகவும் ,சுவாரசியமாகவும் இத்திரைப்படத்தில் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் கூறியிருப்பார். மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் தங்களது சிறப்பான நடிப்பால் கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளனர். ஆக்சன் காட்சிகளே இல்லாவிட்டாலும் அற்புதமான கதைகளத்தால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் இயக்குனர்.

சித்தா:

இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்த வருடம் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சித்தா. நடிகர் சித்தார்த் இத்திரைப்படத்திற்கு தனது திறமையான நடிப்பால் உயிரூட்டி உள்ளார் என்று கூறலாம் .யாரும் இதுவரை சொல்லாத ஒரு பக்கத்தை இந்த படம் எடுத்துக் கூறிருயிந்தது . ஒரு சித்தப்பாவிற்கும், மகளுக்குமான  உறவு பார்ப்பவர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.