இந்த கேள்விய அவரை பாத்து கேப்பீங்களா..? இல்ல கேக்க தான் முடியுமா உங்களால..? நேரலையில் கணவர் குறித்த கேள்விக்கு கடுப்பான கீர்த்தி பாண்டியன்..

By Begam on மார்கழி 16, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு வெளியான வில்லா 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து இவர் சூது கவ்வும், பீட்ஸா 2 வில்லா, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே, நிஜமெல்லாம் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள அசோக் செல்வன், சமீபத்தில் நடித்த ‘போர்த்தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன்.

   

 

நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகள் தான் இந்த கீர்த்தி பாண்டியன். தற்பொழுது இவர்களிருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்பொழுது நடிகை கீர்த்தி பாண்டியன் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் அசோக் செல்வனுக்கும், தனக்கும் உள்ள புரிதல்களை பற்றி அதிகம் பேசி வருகிறார்.

Keerthy Pandian

#image_title

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ‘திருமணத்துக்கு பிறகு இனி நடிப்பீங்களா? என்று கேட்ட பொழுது,  அவர்  இந்த கேள்வியை நீங்க அசோக் கிட்ட கேப்பீங்களா? கல்யாணம் ஆச்சுன்னா நீங்க இனிமேல் நடிப்பீங்களா சார். அப்படின்னு ஒரு ஆணை பார்த்து யாரும் கேட்கிறது. நாம 2023ல் இருக்கோம். ‘வாழு வாழ விடு’ ன்னு  நாம நம்ம லைப் -அ வாழனும். நானும் individual. அவரும் individual. கல்யாணத்துக்கு அப்புறமா நடிக்குறதுல இன்னும் இன்னும் interest நிறைய இருக்கு.’ என்று பேட்டி எடுத்தவரை கதிகலங்க செய்து விட்டார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)