மகளுடன் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் ஷாருக்கான்.. வெளியான புகைப்படங்கள்..!!

By Nanthini on மார்கழி 15, 2023

Spread the love

பாலிவுட் கிங் காங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் சமீபத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

   

 

   

இதன் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான டன்கி படத்தின் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் முதல் முறையாக இந்த திரைப்படத்திற்காக ஷாருக்கான் இணைந்து பணியாற்றியுள்ளார்.

 

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே ஷாருக்கான் தொடர்ந்து திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ள அவருடைய மகள் சஹானா கான் தனது தந்தையுடன் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

சஹானா கான் நடிப்பில் அண்மையில் சோயா அக்தரின் தி ஆர்ச்சீஸ் என்ற திரைப்படம் வெளியானது. இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ஷாருக்கான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மா வைஷ்ணவி தேவியின் கோவிலுக்கு சென்று இருந்தார்.

அவர் இந்த ஆண்டு மட்டும் மூன்று முறை அங்கு சென்று தரிசனம் செய்தார். தற்போது சீரடி சாய்பாபா கோவிலுக்கும் அவர் தனது மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.