Connect with us
Ajith Kumar

CINEMA

அஜீத்குமார் நடிக்கிற விடாமுயற்சி படத்தோட கதை இதுதான் – அட இதுவும் ஹாலிவுட் படத்தோட ஈயடிச்சான் காப்பிதானா?

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜீத், திரிஷா நடித்துவரும் படம் விடாமுயற்சி. அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜீத்குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் வென்ற நடிகர் ஆரவ், நடிகை ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இதில் அர்ஜூன் மனைவியாக ரெஜினா வருகிறார். இப்போது நடந்துவரும் படப்பிடிப்பில் அஜீத், அர்ஜூன் மோதிக்கொள்ளும் ஆக்ரோஷமாக சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Ajith Kumar

#image_title

   

இப்போது விடாமுயற்சி படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் அஜீத்குமார், திரிஷா இருவரும் கணவன் மனைவி. இருவரும் ஒரு இடத்துக்கு டிரிப் சென்ற போது திரிஷா திடீரென காணாமல் போய் விடுகிறார். அவர் வில்லன் கைகளில் சிக்கிக்கொள்கிறார். காணாமல் போன மனைவியை அஜீத்குமார் கண்டுபிடிப்பதுதான் இந்த படத்தின் மையக்கரு. இப்படி காதலி, மனைவி, குழந்தை, பெற்றோர் காணாமல் போய் கதாநாயகன் கண்டுபிடித்த பல கதைகள், தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar

#image_title

ஆனால் விடாமுயற்சி கதை, ஏற்கனவே வந்த ஒரு ஹாலிவுட் படத்தின் கதைதான் என்றும் கூறப்படுகிறது. அந்த ஆங்கில படத்தின் கதைப்படி இதுபோல் இன்பச்சுற்றுலா சென்ற காதலன், காதலியும் உல்லாசமாக சுற்றித்திரியும்போது ஓரிடத்தில் தன் காதலி தொலைந்துபோய் விடுகிறாள். அதை தேடி கண்டுபிடிக்க காதலன் போராடும் கதைதான் அந்த படம். அதே கதையை காதலன், காதலிக்கு பதிலாக கணவன், மனைவியாக இதில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த கதையும் அரைத்த மாவு கதைதானே தவிர வேறு ஒன்றும் புதுமையாக இல்லை என்பதால் அஜீத் ரசிகர்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top