நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக 1980, 1990களில் வலம் வந்தவர். ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் விஜயகாந்த். குறிப்பாக விஜயகாந்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஏனென்றால் குடும்ப சென்டிமென்ட் படங்களில் விஜயகாந்த் நடிப்பு பெண்களை மிகவும் கவரும் விதமாக இருந்தது. குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், செந்தூரப்பூவே, என் ஆசை மச்சான், ராஜநடை, அம்மன் கோவில் கிழக்காலே, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என பல சென்டிமென்ட் படங்களில் விஜயகாந்த் பெண்களின் மனம் கவர்ந்தார்.

#image_title
ஆனால் துவக்கத்தில் ரஜினி இருந்த பிரச்னையே விஜயகாந்துக்கும் இருந்தது. அவர் களையாக இருந்தாலும் கருப்பான நிறத்தில் இருப்பதை ஒரு குறையாக கருதி படங்களில் எளிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சினிமாவில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகளை விஜயகாந்த் தேடிக்கொண்டே இருந்தார். அப்போது அவருக்கு உதவியவர் நடிகர் குள்ளமணி தான். விஜயகாந்த் நடிகரான பிறகு, அவரது படங்களில் குள்ளமணி தவறாமல் நடிப்பது வழக்கமாக இருந்தது.

#image_title
அதற்கு காரணம், விஜயகாந்துக்காக குள்ளமணி பல பேரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். குள்ளமணி பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் விஜயகாந்த் புகைப்படத்தை காட்டி, இவர் விஜயராஜ், மதுரைக்காரர், நல்ல நடிகர், வில்லன் கேரக்டரிலும் நடிப்பார் என விஜயகாந்துக்காக வாய்ப்பு கேட்டவர் குள்ளமணி. அவர் மூலமாக தான் தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தின் முதல் காட்சி, குன்றத்தூர் முருகன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தன் குடும்ப நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதை தனது முதல் படத்தின் முதல் ஷாட் எடுத்த குன்றக்குடி முருகன் கோவிலில் தான் விஜயகாந்த் துவங்குவார் என்று ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
