Connect with us

CINEMA

சியான் 63-ல் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்.. படு தோல்வி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கூட்டணியா?… புலம்பும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்கு ஏற்றவாறு தனது உருவத்தை மாற்றிக்கொண்டு நடிப்பதில் விக்ரமை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் வித்தியாசமாக நடித்துள்ள விக்ரமின் 63வது திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

   

அதாவது தமிழ் சினிமாவில் டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இரண்டு திரைப்படங்களை தரமாக கொடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமுக்கு கோப்ரா திரைப்படத்தை கேரியர் ஒஸ்ட் திரைப்படமாக கொடுத்துவிட்டார்.

ஆனால் அந்த இயக்குனரை தாங்கிப் பிடிப்பதற்காக சீயான் 63 திரைப்படத்தில் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து மீண்டும் இணைகின்றனர். இதனால் சியான் 63 படத்தில் மீண்டும் விக்ரம் ரிஸ்க் எடுப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என ரசிகர்கள் புலம்புகின்றனர். மேலும்  இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு மிகப் பெரிய அடையாளத்தை தந்த டிமாண்டி காலனி திரைப்படத்தில் இரண்டாம் பாகத்தை அவர் பாலிவுட்டில் இயக்க உள்ள நிலையில் அதன் பிறகு சீயான் 63 திரைப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top