அந்த நடிகை மீது காதல் வயப்பட்ட விஜய்.. அப்பாவின் வார்த்தையால் முறிந்து போன காதல்.. யார் அந்த நடிகை தெரியுமா..??

By Nanthini on மார்கழி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சங்கவியை காதலித்துள்ளார். விஜய் மற்றும் சங்கவி இருவரும் ஒன்றாக இணைந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை மற்றும் ரசிகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையே காதல் மலர ஆனால் விஜய் அதனை வெளியில் சொல்லாமல் இருக்க சங்கவி இரவு நேரத்தில் விஜயை சந்திக்க வந்துள்ளார். இதனை அறிந்த விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விஜயை திட்டிய நிலையில் அத்துடன் அந்த காதல் முறிந்து போனது.

   

அதன் பிறகு விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படத்தை பார்த்துவிட்டு அவரின் தீவிர ரசிகையான சங்கீதா லண்டனில் இருந்து விஜயை பார்ப்பதற்காக கிளம்பி வந்துள்ளார். தன்னைப் பார்ப்பதற்காக கடல் தாண்டி வந்த சங்கீதாவை விஜய் ஆச்சரியத்துடன் பார்த்த நிலையில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது விஜயின் பெற்றோருக்கு சங்கீதாவை பிடித்துப் போக திருமணம் குறித்து பேசி உள்ளனர்.

   

 

பிறகு இருவரும் சம்மதம் தெரிவிக்க 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜய் மற்றும் சங்கீதா ஜோடிக்கு திருமணம் நடந்தது. முறைப்படி மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் சுமார் 5,000 ரசிகர்களை அழைத்து மிகப்பெரிய விருந்து வைத்து விஜய் திருமண வரவேற்பு நடத்தினார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இன்றும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.