Connect with us

CINEMA

‘விஜய் மட்டும்  தான் பிரியாணி போடுவாரா..? நாங்களும் போடுவோம்’… 100-க்கும் மேற்பட்ட பெண் ரசிகைகளுக்கு பிரியாணி போட்ட அன்னபூரணி…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. நடிகை நயன்தாரா முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் அதே நேரத்தில், கதாநாயகிகளை மட்டுமே மையமாகக் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 

   

அந்த வகையில், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் கடும் போட்டிக்கு மத்தியில் அதிக திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அன்னபூரணி படத்தின் முதல் பாதி இரண்டாம் பாதியுடன் ஒப்பிடும்போது சிறப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அன்னபூரணி படத்தின் கதை பார்வையாளர்கள் யூகிக்கக் கூடிய அளவுக்கு எளிமையான கதை என்றும், ஆனால், நிலேஷ் கிருஷ்ணாவின் ஸ்டைலான மேக்கிங் படத்தை ரிச்சாகக் காட்டியுள்ளது. ஆனால், இயக்குனர் திரைக்கதையில் ஈர்க்கத் தவறிவிட்டார். இசையமைப்பாளர் தமன் தனது இசை மூலம், அன்னபூரணி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.அன்னபூரணி படத்தில் ஒரு பிராமணப் பெண்ணின் பிரச்சனைகளைப் பேசும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் பாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார் ஆகியோர் அவர்களின் கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்துள்ளனர். இந்த படம் நயன்தாராவுக்கு மற்றொரு வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக ‘மண்ணாங்கட்டி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, தனது ரசிகர்களுக்கு பிரியாணி உணவை பரிமாறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ப்ரோமஷன் விழா கல்லூரி ஒன்றில் நடைபெற்றுள்ளது. இதுவரை தனது படத்துக்கென எந்தவித ப்ரமோஷன் விழாவிலும் பங்கேற்காத நயன்தாரா இவ்விழாவில் பங்கேற்ற லேடி சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களுக்கு பிரியாணி பரிமாறியுள்ளார்.  நடிகர் ஜெய்யும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Zee Studios South (@zeestudiossouth)

Continue Reading

More in CINEMA

To Top