நடிகை சங்கீதா, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக இருக்கிறார். நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக கபடி கபடி படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்தார். தனம், பிதாமகன், மன்மதன் அன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். நடிகர் ஆர்யா பங்கேற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்டது. இதில் ஆர்யாவை விரும்பும் பெண்கள் பங்கேற்றனர். அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக தான் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை சங்கீதா தான்.

ஒரு நேர்காணலில் இதுகுறித்து நடிகை சங்கீதா கூறியதாவது,
டிவி சேனலில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த துவங்குவதற்கு முன்பே, தயாரிப்பாளர்களிடமும், நடிகர் ஆர்யாவிடமும் இதுபற்றி பலமுறை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டேன். இது மக்களை ஏமாற்றுகிற ஒரு பேக் நிகழ்ச்சி அல்ல. ஸ்கிரிப்ட் எழுதி வைத்து செய்கிற விஷயமும் இல்லை. உண்மையிலேயே தனக்கு பிடித்த பெண் இந்த நிகழ்ச்சி மூலம், ஆர்யா நிச்சயம் திருமணம் செய்துகொள்வார் என்று உறுதியாக கூறினர். ஆர்யாவிடமும் இதுபற்றி கேட்ட போது, இதில் எந்த பொய்யும் இல்லை. நிச்சயமாக பிடித்த பெண் அமைந்தால், திருமணம் செய்துக்கொள்வது உறுதிதான் என்றார். அதுகுறித்து அக்ரிமென்ட்டை என்னிடம் காட்டினர்.

அப்படி உறுதியாக அவர்கள் கூறிய பின்புதான் இந்த நிகழ்ச்சியை, நான் பங்கேற்று நடத்தினேன். முதலில் துவங்கிய சில நாட்களுக்கு ஜாலியாக, காமெடியாக சென்ற இந்த நிகழ்ச்சி ஒரு கட்டத்துக்கு பிறகு எமோஷனலாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் அவரால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது தவறாக போய்விடுமோ என்ற பயமும் ஆர்யாவிடம் இருந்ததை நான் தெளிவாக புரிந்துக் கொண்டேன். அதற்கு மேல் அவரை நான் வற்புறுத்த, என் முடிவை திணிக்க விரும்பவில்லை. சேனலில், அவரை விடாதீங்க, எப்படியாவது பதிலை வாங்குங்கன்னு காதிலே சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா நான், ஆர்யா கிட்ட, உங்க முடிவு அதுதான் என்றால் நான் ஏற்றுக்கொள்கிறேன், விட்டுடுங்க என்று கூறிவிட்டேன் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகை சங்கீதா.

