இணையத்தில் வெளியான PAN இந்திய நடிகையின் அந்தரங்க வீடியோ.. அதிர்ந்து போன திரையுலகம்…

By Begam on கார்த்திகை 27, 2023

Spread the love

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் இந்த டீப் ஃபேக் வீடியோக்கள் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. AI என்னும் செயற்கை தொழில்முறை நுட்பத்தை பயன்படுத்தி எந்த ஒரு வீடியோவையும் ஈசியாக மார்பிங் செய்து , அந்த நடிகைகளின் முகங்களை பொருத்தி ஆபாச வீடியோக்களாக இணையத்தில் வைரல் ஆக்கி விடுகின்றனர்.

   

பலரும் இதனை பொய்யானது என்று தெரியாமல் கூட அதிகம் பகிர, இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி விடுகிறது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை நடிகர் அமிதாப்பச்சன் கடுமையாக எதிர்த்து இருந்தார். இதை தொடர்ந்து பல்வேறு நடிகர்களும், நடிகைகளும் கண்டனம் தெரிவிக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

   

 

நடிகை ரஷ்மிகா மந்தனாவும் போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய அரசு இதுபோன்ற  வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. அப்படி இருந்தும் இந்த டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியிடுவது இன்னும் குறையவில்லை.

அந்த வகையில் தற்பொழுது பாலிவுட்டின் பிரபல நடிகையான ஆலியா பட்டின் படுக்கை அறை காட்சி  வீடியோ ஒன்று  இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதுபோன்ற வீடியோவை எதிர்த்து எவ்வளவு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும் இதனை ஒழிக்க முடியாமல் அரசும் திணறி வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தும் வருகின்றனர்.