அந்த ஹீரோவோட அப்பா, என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டார் – விசித்ராவை தொடர்ந்து நடிகை ஷகீலா சொன்ன ‘பகீர்’ தகவல்

By admin on கார்த்திகை 26, 2023

Spread the love

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகை விசித்ரா. ஒரு டாஸ்க்கில் பேசிய விசித்ரா. தெலுங்கு பட ஹீரோ, 2001ம் ஆண்டில் கேரளா, மலம்புழாவில் நடந்த ஷூட்டிங்கின் போது, என்னை நைட் ரூமுக்கு வா என அழைத்தார். நான் போகாததால் பல விஷயங்களில் என்னை டார்ச்சர் செய்தார் என கூறியிருந்தார். விசித்ராவை தொடர்ந்து இப்போது நடிகை ஷகிலாவும் இதுபோன்ற ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.

Actress Shakila

   

ஷகிலா அந்த நேர்காணலில் கூறியதாவது, விசித்ரா, தன்னை அப்படி கூப்பிட்டது யார் என வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டும். தெலுங்கில் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன் எனக்கு இப்படி சம்பவம் நடந்துள்ளது தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் இவர் தமிழால் நடிகர் சசிகுமாரின் போராளி படத்தில் ஒரு கதாநாயகனாகவும் நடித்துள்ளார்

   

 

தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக நடித்துவருகிறார். அவருடைய அப்பா E.V.V.சத்தியநாராயணராவ் தெலுங்கு சினிமாவின் முன்னை டைரக்டர்,என்னை தப்பாக தான் கூப்பிட்டார். அட்ஜஸ்ட்மெண்டுக்காக தான் அவர் வரச் சொன்னார். அடுத்த படத்தில் நடிக்க சான்ஸ் தர்றேன் என்றார். நான் மறுத்துவிட்டேன். இந்த படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கி விட்டேன். அடுத்த படத்தில் நடிக்க எனக்கு விருப்பமும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை என்று கூறினேன். இப்போது அந்த டைரக்டர் இல்லை. இறந்துவிட்டார்.

இப்போதும் நான் தெலுங்கு பீல்டில் இருக்கிறேன். மொத்த இன்டஸ்ட்ரியும் என்னை கேட்டாலும், ஆமாம் என்றுதான் சொல்லுவேன். ஆனால் விசித்ரா ஏன் மறைக்கிறார். தைரியமாக அந்த நடிகர் பெயரை சொல்ல வேண்டியதுதானே. தெலுங்கு இன்டஸ்ட்ரிக்கு போனால் உதைப்பார்கள் என பயப்படுகிறாரா என தெரியவில்லை. விசித்ரா எனக்கு பிரண்டுதான். அவரும் நானும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். நான் பயம் இல்லாமல் சொல்லும்போது, அவரும் அப்படி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன் எனக் கூறியிருக்கிறார் ஷகிலா.