படப்பிடிப்பில் ரூமுக்கு அழைத்த நடிகர்.. 22 வருஷத்துக்கு அப்றம் பிக் பாஸ் வீட்டில் போட்டுடைத்த விசித்ரா.. இவர் தான் அந்த பிரபல ஹீரோவா..?

By admin on கார்த்திகை 22, 2023

Spread the love

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இப்போது 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில், தங்கள் வாழ்வில் நடந்த பூகம்ப விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் டாஸ்க் நேற்று வழங்கப்பட்டது. இதில் பேசிய நடிகை விசித்ரா சொன்ன ஒரு தகவல், நடிகை திரிஷா விவகாரத்தை எல்லாம் பின்னுக்கு தள்ளி, இப்போது தீயாக பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா கூறியதாவது, நான் கடந்த 2001ம் ஆண்டில், ஒரு டாப் ஹீரோ படத்தில் நடிக்க கேரளா சென்றிருந்தேன். அப்போது மலம்புழாவில் ஷூட்டிங் நடந்தது. அப்போது, அந்த படத்தின் ஹீரோவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், இந்த படத்தில் நீ நடிக்கிறாயா என கேட்டார். ஆமாம் என்றேன். உடனே, இன்னிக்கு நைட் என் ரூமுக்கு வந்துவிடு என்றார். என் பெயரை கூட கேட்கவில்லை. இது அதிர்ச்சியாக இருந்தது. நான் அவரை கண்டுகொள்ளவில்லை.

 Actress Vichitra

   

அன்று இரவு ஓட்டல் அறையில் நான் தங்கியிருந்த போது, நான்கைந்து பேர் என் கதவை தட்டி பயமுறுத்தினர். தினமும் ஏதோ ஒரு விதத்தில் என்னை டார்ச்சர் செய்தனர், அங்கிருந்த ஒரு ஓட்டல் ஊழியர் என் பிரச்னையை புரிந்துக்கொண்டு தினமும் ஒரு அறையில் தங்க வைத்தார். இதன்பிறகு ஷூட்டிங் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட சண்டை காட்சியில் என் உடம்பில் தேவையில்லாத தொட்டு தொட்டு அவர்கள் நடிப்பது போல் என்னை சீண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கையை பிடித்துவிட்டேன். இதுகுறித்து அங்கிருந்த ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் சொன்னேன். அவர் அத்தனை பேர் முன்னிலையில் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன்பின் ஒரு கட்டத்தில், இந்த சினிமாத்துறையே வேண்டாம் என ஒதுங்கி விட்டேன். நான் சினிமாவை விட்டு முற்றிலும் விலகியதற்கு இந்த சம்பவம்தான் காரணம் என விசித்ரா கூறியிருந்தார்.

   

 Actress Vichitra

 

இந்த விஷயத்தை விசித்ரா சொன்ன பிறகு, நெட்டிசன்கள் விசித்ரா கூறிய தகவல்களை வைத்து அந்த டாப் நடிகர், ஸ்டண்ட் மாஸ்டர் விவரங்களை கண்டறிந்து, அதை வைரலாக்கி விட்டனர். அதாவது, 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படம் பலேவடிவி பாசு. இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாலகிருஷ்ணா. இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்தவர் ஏ.விஜய். ஆக விசி்தரா கூறிய சம்பவம், இந்த படத்தில்தான் நடந்திருக்கிறது. விசித்ராவை ரூமுக்கு அழைத்தவர், தெலுங்கில் பெரிய நடிகராக உள்ள பாலகிருஷ்ணா என்பது உறுதியாகி உள்ளது. பெரிய ஹீரோவாக இதுவரை தன்னை ரசிகர்கள் மத்தியில் காட்டிக்கொண்டிருந்த பாலகிருஷ்ணாவின் முகமூடியை கிழித்த விசித்ராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள், பாராட்டுகள் குவிந்து வருகிறது.