மனசே உடஞ்சிபோச்சி.. பெண்களை மதிக்கணும்.. திரிஷா – மன்சூர் விவகாரம்.. லோகேஷ் என்னசொல்லிருக்காரு பாருங்க..

By Begam on கார்த்திகை 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

   

உலகம் முழுவதும் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனையும் படைத்தது. 250 முதல் 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்துள்ளது.  இத்திரைப்படத்தில் இருதய ராஜ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் மன்சூர் அலி கான். தற்பொழுது  லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட் ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டதாக மன்சூர் அலிகான் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

   

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானின் ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் கைதி படத்தைக்கூட மன்சூரை மனதில் வைத்துதான் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் திரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதனை த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த ட்விட்டை குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் அந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ‘ மன்சூர் அலிகான் பேசியதை கண்டு நான் மனம் உடைந்தேன். அது என்னை கொதிப்படையவும் செய்துள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டும்’  என கூறியுள்ளார். இதோ அவரின் ட்விட்டர் பதிவு…