“அம்மா, அம்மானு என் மேல அவ்ளோ உயிரா இருந்தா ரக்சிதா”.. மருமகளை நினைத்து கண்ணீர் விட்ட அழுத தினேஷின் அம்மா..

By admin on கார்த்திகை 19, 2023

Spread the love

எங்களை பொருத்த வரை ரக்சிதாவை ஒரு வார்த்தை குறை சொல்ல மாட்டோம். சமீபத்தில் ரக்சிதா அப்பா இறந்ததுக்கு நாங்க போயிட்டு வந்தோம். தினேஷூம் போனார். எங்கள் மகன் தெளிவாக இருக்கிறார். எந்த பிரச்னை என்றாலும், பொறுமையாக இருங்க என்று எங்களுக்கு அட்வைஸ் செய்கிறார். இந்த விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என எங்களை சமாதானப்படுத்துகிறார்.

Raksita Mahalakshmi

   

ரக்சிதா எங்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டவராக இருந்தவர். இப்போது ஏன் இப்படி இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ரக்சிதா மட்டுமின்றி அவரது அப்பா, அம்மா, தாய் மாமன்கள், சித்தப்பா, பெரியப்பா என அனைவருமே அன்பானவர்கள். நல்ல மனிதர்கள். அவர்கள் மீது எந்த தவறுமே சொல்ல முடியாது. எங்கள் மீது இப்போது கேஸ் கொடுத்திருப்பதால், கேஸ் நடக்கிறது. என்ன முடிவோ அது நடக்கட்டும். ரக்சிதா, தன் மாமியார் மீது அன்பாக, பாசமாக இருப்பதை பார்த்து சிலர், தினேஷிடம் இது ரக்சிதாவிடம் அம்மாவா என்று கேட்டுள்ளனர். இல்லை, இது என்னுடைய அம்மா என்று அவர் கூறிய போது ஆச்சரியப்பட்டுள்ளனர். மாமியார் மீது அவ்வளவு பாசம் கொண்ட மருமகளா தான் அவர் நடந்துக்கொண்டார்.

   

Raksita Mahalakshmi

 

எங்க வீட்டில் பெண் குழந்தைகள் கிடையாது. ரெண்டுமே பசங்கதான். அதனால், நான் ரக்சிதாவை மருமகளாக பார்க்கவில்லை. என் சொந்த மகள் போல தான் பார்த்தேன். அவரும் என்னிடம் பாசமான மகளாக தான் எப்போதும் அன்பாக நடந்துக்கொண்டார், என்னை எப்பவும் அம்மா, அம்மா என கூப்பிட்ட ரக்சிதா… என கூறிய தினேஷின் அம்மா, நேர்காணலின் போது கண்ணீர் விட்டு அழுதார். பின், ரக்சிதா எந்த தவறும் சொல்ல முடியாத ஒரு நல்ல கேரக்டர். இங்கு நடிகை மைனா நந்தினி வருவார். எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். அப்போதெல்லாம் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம் என்று தினேஷ் பெற்றோர் தங்கள் மருமகள் ரக்சிதா மகாலட்சுமி குறித்து கூறியிருந்தனர்.