‘என் அண்ணனை பத்தி ப்ளீஸ் இப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க’.. எமோஷனலான பிக் பாஸ் விக்ரமின் விக்ரம் தங்கை (வீடியோ)..

By Begam on கார்த்திகை 18, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்களும், இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆனது, இன்றுடன் 49 நாட்களை நிறைவு செய்துள்ளது.

   

ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல், சண்டைக்கும் சச்சரவுக்கும் பேர் போன வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் சரவணன் விக்ரம். இவர் எதற்கு இந்த வீட்டிற்குள் இருக்கிறார் என்பதே தற்போது வரை ரசிகர்களுக்கு சந்தேகமாக உள்ளது.

   

 

 

அந்த அளவிற்கு தனது பங்களிப்பை இந்த வீட்டில் கொடுத்து கொடுத்து வருகிறார்.  இவர் ஒரு சமயத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராகவும் இருந்தார். அந்த எபிசோடுகளையும் நாம் பார்த்து இருப்போம்.  சமீபத்தில் அவர் நள்ளிரவில்  மிக்சரை சாப்பிட்ட வீடியோ கூட வெளியாகி வைரலானது. இந்நிலையில் தனக்குத்தானே தான் டைட்டில் வின்னர் எனவும் கூறி வருகிறார் இதனை குறித்து பல்வேறு சமூக வலைத்தளங்களும் வீடியோ வெளியிட்டு அவரை கலாய்த்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி தனது அண்ணனை கலாய்த்து வீடியோ வெளியிடுபவர்களுக்கு அவரது தங்கை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ‘பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் முழுதாக பார்க்கும் அளவிற்கு நேரம் இருக்காது பாதி பேர் நீங்கள் போடும் மீம்ஸ் மற்றும் டவுன்களை வைத்து தான் பிக் பாஸில் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது என்று நம்புவார்கள். அதனால் ஒருவரை பற்றி போடும் போது கவனமாக போடுங்கள்.  ஒருவரை பற்றி சொல்லும் போது பாசிட்டிவாக சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் முடியவில்லை என்றால் நெகட்டிவ் விஷயங்களை கூட சொல்லலாம். ஆனால், நெகட்டிவ் விஷயத்தை உருவாக்கி பொய்யான விஷயத்தை பரப்பாதீர்கள்’ என்று எமோஷனலாக கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Surya (@suryashine_designer)