அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு… திடீரென கையை பிடித்த மூதாட்டி… வைரலாகும் வீடியோ…

By Begam on கார்த்திகை 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகி பாபு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் பாபு என்ற தனது பெயரை யோகி பாபு என மாற்றிக்கொண்டார்.

   

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை என்ற திரைப்படம் தான் இவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. இவர் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தனியாக பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

   

 

இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். தற்பொழுது இவர் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் யோகி பாபுவுக்கு கடவுள் பக்தியும் மிக அதிகம். இவர் அவ்வப்பொழுது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனமும் செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி தரிசனமா செய்ய சென்றுள்ளார். அங்கு மூதாட்டி ஒருவர் திடீரென கையை பிடித்துக் கொள்ளவே, அப்படியே கலங்கி நின்ற அவரின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…