வசூலில் ‘ஜப்பான்’-ஐ நாக் அவுட் செய்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.. மூன்றே நாளில் இத்தனை கோடியா..?

By Begam on கார்த்திகை 14, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.  இவருடைய இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜிகர்தண்டா. மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது. இந்தப் படம் சென்னையில் 100 நாட்கள் ஓடியது. இதற்குப் பிறகு பெரிய இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து எல்லாம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

   

இந்த நிலையில் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் தற்பொழுது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர்.  ஜிகர்தண்டா படம்  தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களில் வின்னராக மாறியது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தான்.

   

Actor Karthi

 

ஜப்பான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.   இதன்படி, ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 2.5 கோடி ரூபாய்,  2-ம் நாள் வசூல் 4.86 கோடி ரூபாய், 3-ம் நாளில் 7. 2 கோடி ரூபாய் வசூல் செய்தது. நேற்று 4-வது நாளில் 5 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

எனவே, ஜிகர்தண்டா படத்தின் மொத்த வசூல் 4 நாட்களில் 19 கோடியாக உள்ளது. ஆனால் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் 4 நாட்களிலும் மொத்தமாக 12 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம். தற்பொழுது இதனை ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.