விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். துவங்கியது. இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டனர். ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 43 நாட்களை நிறைவு செய்துள்ளது.

இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் நிக்சன். இவர் ஐஷுவிடம் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் ஏற்கனவே வினுஷாவை body shaming செய்து ஐஷுவிடம் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் அந்த கமெண்டை வீட்டில் அனைவர் முன்னிலையிலும் போட்டு நன்றாக மாட்டிவிட்டார். இதற்கு விளக்கமளித்த நிக்ஸன், ‘தான் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும், நம்புகிறவர்கள் நம்புங்கள். அதற்காக வினுஷாவிடம் மன்னிப்பும் கேட்டேன்’ என கூறியிருந்தார். இந்த நிலையில் வினுஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும் வார இறுதியில் கமலஹாசன் சார் வந்து இதைபற்றி கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் Bully Gang பற்றி கமல் இந்த வாரம் கோபமாக பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமே மிஞ்சியது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததில் எனக்கு எந்த பங்கும் இல்லை, அது போட்டியாளர்கள் எடுத்த முடிவு தான் என கமல் தன் மீது வந்த விமர்சனங்களை சரி செய்ய மழுப்பலாக எபிசோடு முழுவதும் பேசினார் என நெட்டிசன்கள் கமலஹாசனை வறுத்தெடுத்தது வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வினுஷாவும் நிக்சனை பற்றி எதுவும் பேசாமல் இருந்ததால் ‘Ended with Disappointment’ என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பதிவானது தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு பலரும் அவருக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதோ வினுஷாவின் பதிவு…

