இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா..? Guess பண்ணுங்க பாக்கலாம்…

By Begam on கார்த்திகை 12, 2023

Spread the love

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை நிவேதா பெத்துராஜின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்ப பங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார்.

   

போகப் போக அவர் ஹாட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்து இணையத்தை திணறச் செய்து வருகிறார். டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் செம வைரல் ஆனது. ஒரு நாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அவருக்கு தோல்வியே கிடைத்தது.

   

 

இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்தினார். அங்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சித்ரலகிரி, அலவைகுண்ட பிரமுலு போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன.

இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபல நடிகையாக நிவேதா பெத்துராஜ் தற்போது வலம் வந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது அம்மாவுடன் தான் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)