சர்ச்சைகளுக்கு பிறகு மனைவி மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படங்கள் (உள்ளே)..

By Begam on கார்த்திகை 12, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த சில நாட்களாக இவர் மீது மக்களுக்கு இருந்த நல்ல அபிப்ராயம் மாறத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் இசையமைப்பாளர் டி இமான் சிவகார்த்திகேயன் மீது வைத்த குற்றச்சாட்டு தான். அந்த பேட்டியில் அவர்’ சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் அதுகுறித்து, வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறி திடீரென அதிர்ச்சியை கிளப்பியிருந்தார்.

   

இதைத்தொடர்ந்து  ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் கண், காது, மூக்கு வைத்து இமானின் முன்னாள் மனைவிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறி விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சையில் வான்டடாக வந்து மூக்கை நுழைத்து இமானின் முன்னாள் மனைவியும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.

   

 

இப்படி இணையதளமே தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்க, இதுதொடர்பான எந்த சர்ச்சைகளுக்கும் விளக்கமளிக்காமல் தன்னுடைய வேலையை மட்டும் கவனித்து வருகிறார்.  இதுகுறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘பொய்க்கு ஏன் நான் விளக்கம் தரணும்னு’ ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், எதையும் கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஆயுதபூஜையை கொண்டாடினார். இதைத்தொடர்ந்து கமலஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். தற்பொழுது இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும்  கூறியுள்ளார். இதோ அந்த பதிவு…