பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக, சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்களும், இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் தற்பொழுது வரை விஜய் வர்மா, அனன்யா, பாவா செல்லதுரை, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, பிரதீப் என ஏழு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்டது இணையத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்து, தற்பொழுது வரை பலதரப்பிரனும் பல்வேறு விதமான கமெண்ட்களை சொல்லி வருகின்றனர். ஒருவழியாக இந்த சர்ச்சைக்கு தான் காரணமில்லை, போட்டியாளர்களின் முடிவு தான் இது என்பதை நிரூபித்து நேற்றைய எபிசோடில் தன்னை காப்பாற்றி கொண்டார் கமலஹாசன்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரசிகர்கள் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது அறிய ஆவலாக உள்ளனர்.அதன்படி இந்த வாரம் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், ஆர் ஜே பிராவோ, ஐசு மற்றும் பூர்ணிமா போன்றோர் நாமினேசன் லிஸ்டில் உள்ளனர். இவர்களில் பூர்ணிமாவிற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்தான் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஐஷு தான் தற்பொழுது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளாராம்.

பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பாராததை எதிர் பாருங்கள் இதுதானே பிக் பாஸ். பூர்ணிமா இருந்தால் தானே கன்டென்ட் கிடைக்கும் எனவே பிளான் போட்டு விஜய் டிவி ஐஷுவை வெளியேற்றிவிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஐஷுவின் வீட்டிலும் தன் மகளை வெளியே அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த வாரம் ஐஷு வெளியேற நிக்சனின் நிலைமை தான் பாவம். இந்த எலிமினேஷன் பத்தி நீங்க என்ன நெனைக்குறீங்கன்னு கமெண்ட் ல சொல்லுங்க.
