விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி பிக் பாஸ் .வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்த இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது வரை 43 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியை விட்டு 7 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேறி உள்ளனர்.

5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களில் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தவர் போட்டியாளர் தினேஷ். இவர் நடிகை ரக்ஷிதாவின் கணவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திருமணம் முடிந்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு விஷயங்களும் இணையத்தில் அப்பொழுது வெளியாகி வருகிறது.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு கூட தனக்கு ஒரு காரணம் இருக்கும் என்று அவரை மறைமுகமாக சுட்டி காட்டி சென்றார் தினேஷ். இந்நிலையில் தினேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது என்று கூறலாம். இவர் மாயா gang-க்கு எதிராக உள்ளதால், மாயா & பூர்ணிமா தினேஷை எப்படி வெளியேற்றுவது? என்று பிளான் போட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காலை இருவரும் ரக்ஷிதாவை பற்றி தினேஷிடம் பேச வேண்டும்.
#Maya #Poornima talks about #Dinesh part 2
•Dinesh pathi onnu solren..WIFE (Rachitha)
•Athai vaichu enna panrathu?
•Atha pathi kekanum.. avara pesa vaikanum.. aaruthal sollanum..
•Ok i got it.. let’s doing..@MSimath #BiggBossTamil #BiggBossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/T6Ms7ULgLk— Flying dreamer (@Guest_account9) November 11, 2023
அதை பற்றி அவரிடம் பேசி ஆறுதல் சொல்லணும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை பார்த்த ரக்ஷிதா, கடுமையான கோபத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘என்னுடைய வாழ்க்கை ஒரு பப்ளிக் ப்ராப்ளம் கிடையாது. எல்லாரும் வந்து கருத்து சொல்றதுக்கு. இப்படி ஒரு கேம் விளையாடாதீங்க. என் Personal life பத்தி பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? இந்த மாதிரி சீப்பான கேமை இதோட நிப்பாட்டிக்கோங்க’ என்று மாயா பூர்ணிமாவை கடுமையாக எச்சரித்துள்ளார். இதோ அந்த பதிவு…

