பல வருடங்களாக தொடரும் சர்ச்சை.. உண்மையில் அஜீத்தை அடித்தாரா இயக்குனர் பாலா..? அன்று ஓட்டல் அறையில் நடந்தது என்ன..?

By admin on கார்த்திகை 11, 2023

Spread the love

நடிகர் அஜீத்குமார் இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருந்து வருகிறார். அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களை, அவரது ரசிகர்கள் அதை தீபாவளி, பொங்கல் போல பண்டிகை நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இப்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில், அஜர்பைஜானில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார் அஜீத்குமார். அதே போல, தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலா. சேது படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த பாலா, பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். பிதாமகன், நந்தா, அவன் இவன், பரதேசி என பல முக்கிய படங்களை தந்த இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar

   

இந்நிலையில், நடிகர் அஜீத்குமார் நடிப்பில், டைரக்டர் பாலாவும் இயக்கத்தில், நான் கடவுள் படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆர்யாவுக்கு முன்னதாக, அந்த கேரக்டரில் அஜீத்குமார் தான் நடிக்க இருந்தார். சிறந்த படங்களை தந்தவர் என்ற முறையில் டைரக்டர் பாலா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த அஜீத்குமார், அவர் சொன்னபடி நான் கடவுள் கேரக்டருக்காக தாடி, மீசை, தலைமுடி எல்லாம் நீளமாக வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் பாலா, அந்த படத்தின் கதையை அஜீத்குமாரிடம் சொல்லவில்லை. அவரை அந்த கேரக்டருக்காக தயார் செய்வதில், முடி வளர்ப்பதில் அதிக கவனம் காட்டினார்.

   

Ajith Kumar

 

பாம்குரோவ் ஓட்டலில் இதுதொடர்பான ஒரு டிஸ்கசன் நடந்த போது அந்த அறையில் டைரக்டர் பாலா, அஜீத்குமார் மற்றும் இரண்டு புரடியூசர்கள் அங்கு இருந்துள்ளனர். அப்போது கதையை தெளிவா சொல்லுங்க, இப்படி தாடி, மீசை, தலைமுடியை வளர்த்துகிட்டு வெளியே போக வர சிரமமாக இருக்கு, என்று அஜீத்குமார் கூற அங்கு வாக்குவாதம் வெடித்திருக்கிறது. அப்போது அஜீத்குமாருக்கு ஒரு அடி விழுந்திருக்கிறது. ஆனால் அங்கிருந்த 3 பேரில் அடித்தது டைரக்டர் பாலா அல்ல என்பது மட்டும் உறுதி என்கிறார் செய்யாறு பாலு. மேலும் அவர் கூறுகையில், அஜீத் நினைத்திருந்தால், இதை பெரிய பிரச்னையாக மாற்றி இருக்க முடியும். ஆனால் வைராக்கியமாக எடுத்துக்கொண்டு விதையாக அன்று இருந்தவர், இன்று விருட்சமாக உயர்ந்து இருக்கிறார் என்று கூறி இருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு.