Connect with us

CINEMA

என்னது.., இந்த கிரிக்கெட் வீரருக்கும் VJ ரம்யாவுக்கு திருமணமா..? வெளியான புகைப்படம்.. சர்ச்சையை கிளப்பிய நெட்டிசன்கள்..

விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் முன்னணி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவருடைய நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்பொழுது இவர் தனியார் நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்றவற்றை மட்டும் தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

   

இதை தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக விஜயின் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியிருந்தார். இவர் சினிமாவை தாண்டி பளு தூக்கு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அபரஜித் என்பவருடன் திருமணம் ஆனது. திருமணமான ஒரே ஆண்டில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்ட ரம்யா, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.  முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ரம்யா  கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை இரண்டாவது திருமணம் முடித்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த புகைப்படத்தில் ரம்யா தினேஷ் கார்த்திக் உடன் ஜோடியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தினேஷ் கார்த்திக் தனது இரண்டாவது மனைவியுடன் இருப்பதாக பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த செய்தி உண்மையல்ல. உண்மையில் தினேஷ் கார்த்திக்கிற்கு தீபிகா என்கிற ஸ்குவாஷ் வீரங்கனையுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரம்யா,  தினேஷ் கார்த்திக் உடன் கேசுவலாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இவ்வாறு கூறி வைரலாக்கி வருகின்றனர்

Continue Reading

More in CINEMA

To Top