இந்த புகைப்படத்தில் கியூட்டாக சிரிக்கும் பிரபல டாப் நடிகை யார் தெரியுமா…? Guess பண்ணுங்க மக்களே…

By Begam

Published on:

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்தப்புகைப்படத்தை பகிர்ந்து இவர் யார் என்ற கேள்வியும் எழுப்ப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களிள் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

   

பின்னர் இவர் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில்  பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது.  இதைத்தொடர்ந்து தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி திடீரென படுவைரலாகி வருகிறது.