விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்தவர் சல்மா அருணா. சென்னையில் பிறந்து கல்லூரி படிப்பை முடித்த சல்மா மீடியா துறையிலும், மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

இவர் பத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பூர்விகா மொபைல் விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சல்மா விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதி கண்ணம்மா சீரியல்ககளில் நடித்துள்ளார்.
மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலிலும் நடித்துள்ளார். சிறகடிக்க ஆசை சீரியல் சல்மாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவா தலையா என்ற புதிய சீரியலில் சல்மா நடிக்க உள்ளார்.

அம்மா பாசத்தை கதைக்களமாக வைத்து நகரம் பூவா தலையா சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
