உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் கடந்த 1-ஆம் தேதி தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ஐஸ்வர்யா ராய் கடந்த 1994- ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.

கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இருவர் படம் மூலம் ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று வரை ஐஸ்வர்யா ராய் சமூக சேவைகளை சைலன்டாக செய்து வருகிறார்.

சுமார் 26 ஆண்டுகால இந்திய சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். அமிதாப் பச்சனின் மருமகளாக இருந்தும் திரைபயணம், குடும்ப வாழ்க்கை, மாடலின், விளம்பரம் என பல துறைகளிலும் ஐஸ்வர்யா ராய் கலக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா ராய் பிளாக்பஸ்டர் படமான பொன்னியின் செல்வன் படத்தில் மந்தாகினி, நந்தினி கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தை அதற்கே உரிய பாணியில் அசால்டாக நடித்துக் காட்டியவர் ஐஸ்வர்யா ராய். இவர் அபிஷேக் பிரச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது தாய் பிருந்தாராய், மகள் ஆராத்யா பச்சன் ஆகியோருடன் மும்பையில் வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

