Connect with us

சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? – அதற்கு இமான் சொன்ன பதில் இதுதான்

CINEMA

சிவகார்த்திகேயன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? – அதற்கு இமான் சொன்ன பதில் இதுதான்

 

கடந்த சில வாரங்களாக, நடிகர் சிவகார்த்திகேயன் – இசையமைப்பாளர் இமான் பிரச்னை, சமூக வலைதளங்களில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு, மன்னிக்க முடியாத ஒரு நம்பிக்கை துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என, இமான் கூறியதற்கு இன்னும் மறுப்போ, விளக்கமோ தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இது, அவர் மீதான தவறான அபிப்ராயத்துக்கு மேலும், மேலும் வழிவகுப்பதாகவே இருக்கிறது.D immanஇந்நிலையில், சவரிமுத்து இயக்கும் புதிய படம் ஒன்றில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். அந்த புதிய படத்தின் அறிமுக விழா, சமீபத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து, செய்தியாளர்கள் இமானிடம் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்னைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறீர்கள் என்றும் அவரிடம் நிருபர்களிடம் கேட்டனர். actor Sivakarthikeyanஅதற்கு பதிலளித்த இமான், முற்றுப்புள்ளி வைப்பதற்கெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார்.இறைவனுக்கு எது சரி, எது தவறு என்பது மனிதர்களை தாண்டி, இறைவனுக்கு தெரியும் என்று நம்புகிறவன் நான். ஆகவே, எல்லாவற்றுக்கும் இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புகிறேன், என பதில் கூறி முடித்துக்கொண்டார் இமான்.

author avatar
Sumathi
Continue Reading
To Top