தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமிமேனன் கடந்த 2012-ஆம் ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு லட்சுமி மேனன் நடித்த கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றியடைந்தது.

லக்ஷ்மி மேனன் தனது முதல் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். அதன்பிறகு படிப்பில் பிஸியான லட்சுமிமேனன் சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மேனன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து லட்சுமிமேனன் பலரது கவனத்தையும் ஈர்த்தார். மலை, சத்தம் போன்ற படங்களிலும் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் மலை.

இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க மாறுபட்ட கதை களத்தோடு இந்த படம் உருவாக இருக்கிறது. யோகி பாபுவுக்கு மனைவியாக லட்சுமிமேனன் நடிப்பதாக தகவல் வெளியாகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

