‘எனக்கு நீ.. உனக்கு நான்’…  பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்த தினேஷ்… வெளியே உருக்கமாக பதிவு வெளியிட்ட ரக்ஷிதா…

By Begam on ஐப்பசி 31, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மிகப் பிரபலமானவர் சீரியல் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து இவர், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த சக சீரியல் நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மன வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

   

இவர் மன அமைதிக்காக வேண்டி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரக்ஷிதா  தனது கணவர் தினேஷ் தனக்கு  ஆபாசம் மெசேஜ் அனுப்பி தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசார் தினேஷை அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர்.

   

 

ஆனால் போலீஸ் விசாரணையில், ‘தினேஷிடம் இருந்து எந்தவித ஆபாச மெசேஜும் வரவில்லை என்பதும்,  ரச்சிதாவை  பொய்யான புகார் அளித்திருந்ததும் நிரூபனமானது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து  அனுப்பினர். இப்படி இருவருக்குமிடையில் பிரச்னை சென்று கொண்டிருக்க தினேஷ் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கணவரை பிரிந்து வாழும் ரக்ஷிதாவிற்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் சமீபத்தில் தான் அவரது தந்தையும் இறந்தார்.

இந்த நிலையில், நடிகை ரச்சிதா, தினேஷ் பிக் பாஸ் எண்ட்ரிக்கு பின்னர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில்,சமீபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்னர் தனது தாயின் கைபிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘உனக்கு நான்.. எனக்கு நீ’ என்று பதிவு செய்துள்ளார். இப்பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…