மகளின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடிய யோகி பாபு.. யார், யாரெல்லாம் இருந்தாங்க தெரியுமா..?

By admin on ஐப்பசி 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதிலும் சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் யோகி பாபு பிரபலமானார்.

   

இவர் தனது நகைச்சுவையால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   

 

முன்னதாக யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடிப்பில் வெளியான வாரிசு, பீஸ்ட் திரைப்படங்களிலும் யோகி பாபு நடித்திருந்தார். ஜெயிலர், ஜவான் படங்களில் யோகி பாபு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

பிஸியாக நடித்து வரும் யோகி பாபு தனது மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்த நாளை கோலாலமாக கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.