Connect with us

CINEMA

இப்படி துரும்பா இளைச்சிடீங்களே…! உடல் மெலிந்து போன நடிகர் அஜித்… விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் லேட்டஸ்ட் பிக்ஸ்…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

   

அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்பொழுது விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கிருந்து எடுக்கப்படும் அஜித்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவ்வப்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது அஜித்துடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இப்படி துரும்பா இளைச்சிடீங்களே’ என்று வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top