தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்பொழுது தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், படு மாஸாக நேற்று வெளிவந்த திரைப்படம் லியோ. இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் மிகப் பிரமாண்டமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரைப்படம் வெளியாகி சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நேற்று வெளிவந்த முதல் நாள் மட்டுமே உலக அளவில் 148.5 கோடி வசூல் செய்ததாக அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது 7 screen ஸ்டுடியோ அறிவித்துள்ளது. தற்பொழுது இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த அறிவிப்பு…
Hello records..
He broke you down ????You couldn’t last a day ????#Leo first day worldwide gross collection is 148.5 crores+ ????
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM ????????#BlockbusterLeo #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/ssC1Vk5RIx
— Seven Screen Studio (@7screenstudio) October 20, 2023
