கௌதம் மேனன் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். ஓவர் பட்ஜெட் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படபிடிப்பு தள்ளி போனது. அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி தற்போது படம் வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.வருகிற நவம்பர் 24-ஆம் தேதி துருவ நட்சத்திரம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் விநாயகம் ஸ்டைலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் லியோ. இந்த படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் லியோ படம் திரையிடுவதற்கு முன்பாக ரிலீஸ் ஆகியுள்ளது. வழக்கமாக ட்ரெய்லர் ஆன்லைனில் தான் வெளியாகும். ஆனால் கௌதம் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லரை தியேட்டர்களில் வெளியிட்டுள்ளார். ஆன்லைனில் துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் விஜயதசமி அன்று ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. லியோ படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
View this post on Instagram
