தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம். இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், அர்ஜுன், கௌதம் மேனன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரைப்படம் வெளியாகி சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. லியோ படத்தின் முதல் நாள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அதாவது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நேற்று வெளிவந்த முதல் நாள் மட்டுமே உலக அளவில் 120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த திரைப்படம் செய்யாத வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து காட்டி இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். முதல் நாளை 120 கோடி உலகளவில் வசூல் கிடைத்துள்ள நிலையில், இந்த வாரம் இறுதிக்குள் திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டையை செய்யும் என்று திரை வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
