தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கின்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி என அறிவிக்கப்பட்டாலும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. தற்பொழுது தளபதி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

லியோ திரைப்படம் எல்சியு-வில் தான் உள்ளது என்றும், அனிருத் தனது பாடல்களால் மீண்டும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் அவர்களுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். தற்பொழுது இவர் லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….
leo first day booked pic.twitter.com/k6713avqXe
— pree (@preethhiiii) October 16, 2023
