தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படமானது நாளை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை லியோ திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் பல. முதலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் இதைத்தொடர்ந்து ரிலீசான லியோ ட்ரைலர் ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.

இதைத்தொடர்ந்து வெளியானது 4 மணி காட்சி சிக்கல். தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பளித்தது.

தற்பொழுது ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது . லியோ படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன், திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் லியோ படத்தின் ஒருவார வசூலில் லாப பங்கீடு தொடர்பாக இருதரப்பு இடையே சுமூக தீர்வு எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாளை பல முக்கிய திரையரங்குகளில் லியோ படம் ரிலீசாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
