இனி இந்த பிரச்சனை வைரலாக கூடாது….. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சிவகார்த்திகேயன்…. அப்படி என்னதான் பண்ணாரு?…!!!

By Mahalakshmi on ஐப்பசி 18, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் எதுவென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் பற்றி தான். டி இமான் கொடுத்த ஒரு பேட்டி தற்போது மிகப்பெரிய வைரலாகிவிட்டது. அதாவது டி இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்தது.

   

தனியார் ஊடகம் ஒன்றுக்கு டி இமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் சிவகார்த்திகேயன் பற்றியும் பேசி இருந்தார். அதாவது சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை தன்னால் மன்னிக்க முடியாது. இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து படம் செய்வது என்பது முடியாத ஒன்று. அவர் செய்ததை நான் மன்னித்தாலும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

   

 

அதை தொடர்ந்து இமான் முன்னாள் மனைவியும் சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் அவர் நல்ல மனிதர் என்றும் தன்னை விவாகரத்து செய்ய இமான் முடிவெடுத்ததை அறிந்து சமரசம் செய்ய வந்தார். ஆனால் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனைத்து வேலைகளையும் இமான் செய்திருந்தார் என இமானின் முதல் மனைவி மோனிகா பேட்டி அளித்திருந்தார்.

 

இப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அனைத்து மீடியாக்களிலும் அதைப் பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.  இதை எப்படியாவது சரி படுத்த வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார். ஐடி விங்ஸ் இடம் கூறி இதனை வைரலாக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் சிவகார்த்திகேயன் பற்றி பிரபலங்கள் பேசிய வீடியோக்களை தற்போது வைரலாகி வருகின்றனர்.