தயவுசெய்து அதை Delete பண்ணுங்க…’ D இமானிடம் கெஞ்சினாரா சிவகார்த்திகேயன்..? பிரபல ஊடகத்தால் வெடித்த பூகம்பம்..

By Begam on ஐப்பசி 17, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். சிறு வயது முதல் முறையாக இசையை பயின்று சர்ச் நட்சத்திர ஹோட்டல் போன்றவற்றில் பாடல்களை பாடி, பின்னர் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினர். குறிப்பாக இவர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து இருக்கின்றார்.

   

சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் இருவரின் காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் இருவரும் கடந்த சில வருடங்களாக பேசிக்கொள்வதில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த டி இமான் இதைப்பற்றி பேசி இருந்தார் அதாவது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நான் நன்றாக அறிவேன் அவர் படங்களில் என்னுடைய பாடல்கள் அனைத்தும் நன்றாக ஹிட் கொடுத்துள்ளது.

   

 

 

ஆனால் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்க முடியாது .அதை தன்னால் வெளியில் சொல்ல முடியாது. அப்படி கூறினால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவரை மன்னித்தாலும், அவர் செய்த துரோகத்தை நான் கட்டாயம் மறக்கவே மாட்டேன். நான் நெருங்கி பழகிய நபர்களில் அவரும் ஒருவர்.

ஆனால் அவர் அப்படி எனக்கு ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என் குழந்தைகள் மட்டும் என்னிடம் வந்து இதைப் பற்றி கேட்டால் நான் அவர்களிடம் மட்டும் சொல்வேன். இந்த ஜென்மத்தில் அவரது திரைப்படங்களில் நான் இனி இசை அமைக்க மாட்டேன்’ என்று வருத்தத்துடன் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் நடிகர் சிவகார்த்திகேயன் இமானுக்கு போன் செய்து, ‘ அண்ணா அந்த வீடியோவ உடனே delete பண்ணுங்க. நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்க காலுல கூட விழுந்து மன்னிப்பு கேக்குறேன். என்னோட அம்மா, மனைவி எல்லாம் இந்த வீடியோவ பாத்தாங்கன்னா அவ்ளோதான்’ என கெஞ்சியதாகவும், அதற்கு இமான்’ அப்படின்னா நீ என்னை பத்தி யோசிச்சியா? எனக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்காங்க தானே’ என கூறி  போனை வைத்ததாகவும் பிரபல சினிமா விமர்சன ஊடகமான வலைப்பேச்சில் கூறப்பட்டுள்ளது. இதோ இது தொடர்பான  வீடியோ…