“அந்த ஹீரோவுடன் நடிக்க இரவு தங்க சொன்னார்கள்”.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகை..!!

By admin on ஐப்பசி 17, 2023

Spread the love

ஹிந்தி நடிகையான மிருனாள் நவேல் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். இவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து கூறியுள்ளார். சமீபத்தில் மிருனாள் நவேல் அளித்த பேட்டியில் கூறியதாவது பட வாய்ப்புக்காக சிறிய நடிகைகள் முதல் பெரிய நடிகைகள் வரை படுக்கைக்கு அழைக்கும் கொடுமையை சந்தித்து இருக்கின்றனர்.

   

அது எனக்கும் நேர்ந்தது. ஒரு விளம்பர படத்தில் நடிக்க நடிகை தேர்வு நடத்தியுள்ளனர். அதற்கு நானும் சென்றேன். அப்போது ஏஜென்ட் ஒருவர் இறுதியில் இருவரை தேர்வு செய்ய உள்ளோம். அதில் நீங்களும் இருக்கிறீர்கள். அதில் செலக்ட் ஆனால் நீங்கள் ஹீரோ கார்த்திக் அரியனுடன் இணைந்து விளம்பர படத்தில் நடிக்கலாம் என கூறினார்.

   

நானும் சந்தோஷமாக இருந்தேன். மறுநாள் விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு உட்பட வேண்டும் என்றும் ஒரு இரவு தங்க வேண்டும் எனவும் அவர் குறுந்தகவல் அனுப்பினார். இதனைக் கேட்டு கோபமடைந்தேன்.

 

அந்த மாதிரி குறுக்கு வழியில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினேன். அவர் மிகச்சிறந்த வாய்ப்பு இழந்து விடாதே. இதற்கு உடன்பட்டு தான் எல்லோரும் தேர்வாகிறார்கள் என கூறினார். நான் அவரை திட்டி விட்டேன். இந்த சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை என கூறினார்.