கன்னட சினிமாவில் சின்னத்திரையில் பாப்புலராகி அதன் பிறகு தமிழ் சின்னத்திரியில் நடிக்க தொடங்கியவர் பிரியங்கா குமார். அவர் விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரம் வெண்ணிலா. இந்த சீரியலில் மிகவும் சிறப்பாக நடித்து வந்த இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இது காற்றுக்கு என்ன வேலி சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. பொதுவாக சீரியலில் மிகவும் குடும்ப பங்காக நடித்து வரும் பிரியங்கா குமார் நிஜத்தில் மிக ஹாட்டான உடையில் போஸ் கொடுத்திருக்கும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து இருந்த அதில் தனது கையில் அடிபட்டு இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது கையில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது கையில் ஒரு பொருள் விழுந்து தனக்கு அடிபட்டது.

ஆனால் அது இவ்வளவு பெரிய வலியாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு தற்போது ஆபரேஷனும் முடிவடைந்துவிட்டது. தனக்காக வேண்டிக் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி நான் மீண்டும் குணமாகி வருவேன் என்று பகிர்ந்திருந்தார்.
