450 கோடியில் படம் எடுக்கிறது விளையாட்டா..? லோகேஷ்-விஜய் சண்டை விவகாரம்.. உண்மையில் நடந்தது இதுதான்..!!

By Priya Ram on அக்டோபர் 16, 2023

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இதில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 19-ஆம் தேதி லியோ திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

   

இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. லியோ படத்திலிருந்து வெளியான நான் ரெடி, படாஸ், அன்பெனும் ஆயுதம் உள்ளிட்ட அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிரமோஷன் செய்யும் விதமாக லோகேஷ் பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

   

 

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட பேட்டியில், தொகுப்பாளர் ஏற்கனவே லியோ பட ஷூட்டிங்கில் உங்களுக்கும் விஜய்கும் இடையே சண்டை என கேள்விப்பட்டோம். அது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த லோகேஷ் நானும் விஜய் அண்ணாவும் இணைந்து தான் அந்த செய்தியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

இப்போது நீங்கள் என்னை வைத்து ஒரு பேட்டி எடுக்கிறீர்கள் என்றால் அதற்குப் பின்னால் நிறைய பேரின் உழைப்பு இருக்கும். தொகுப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கவனமாக இருப்பீர்கள். அப்படி இருக்க 450 கோடியில் படம் எடுப்பது விளையாட்டு இல்லை. நாங்கள் அவ்வளவு கவனமாக இருப்போம். சிலர் இந்த மாதிரி வதந்திகளை பரப்புகிறார்கள்.

அதேபோல நான் எனது சமூக வலைதள பக்கத்தில் லியோ படத்தை இணைத்து பின்னர் அதனை நீக்கியதாக போட்டோஷாப் செய்து வைத்துள்ளார்கள். எப்போதுமே சென்சார் சான்றிதழ் வாங்கிய பிறகு தான் நான் எனது பயோவில் எந்த படத்தையும் இணைப்பேன். அப்படி இருக்க ஏன் இப்படி செய்கிறார்கள்? என்பது தெரியவில்லை என விளக்கமாக பதில் அளித்துள்ளார்.