தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் தனது அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த முனி காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் தான் அனைவருக்கும் பிடித்த நடிகராக மாறியுள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவரது ஜிகர்ந்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியான நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் விரைவில் தன்னுடைய காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் தளபதி விஜயும் மிகவும் நெருக்கமான நல்ல நண்பர்கள். ‘எனக்கு இருக்கும் ஒரே நல்ல நண்பர் நடிகர் விஜய் தான். கேட்கும் நேரத்தில் எல்லாம் உதவி செய்வார்’ என பேட்டி ஒன்றில் ஏற்கனவே கூறியிருந்தார். தற்பொழுது இவர் தனது X தள பக்கத்தில் நடிகர் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘Love you nanba’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
Love you Nanba ❤ @actorvijay pic.twitter.com/Z5k69RVxXm
— Raghava Lawrence (@iamRaghavaoff) October 14, 2023
