ஓடும் பேருந்தில் சில்மிஷம்…! இளம்பெண்ணிடம் அத்துமீறிய பிரபல காமெடி நடிகர் கைது…!

By Begam on ஐப்பசி 14, 2023

Spread the love

மலையாளத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் பினு பி.கமால். இவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் கேரள அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவரது சீட்டுக்கு அருகில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார்.

   

அப்போது நடிகர் பினு கமால் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சத்தமிட, பஸ்சை டிரைவர் நிறுத்தினார். உடனே பினு கமால் பஸ்சில் இருந்து இறங்கி ஓடி தப்பிக்க பார்த்துள்ளார், அதைப் பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை விரட்டி சென்றனர்.

   

நடந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசாரும் பொதுமக்களுடன் சேர்ந்து பினு கமாலை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். தற்பொழுது இத்தகவல் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்களும் இப்படி தற்பொழுது வெளிப்படையாக செய்து வருவது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.