“அது ஐட்டம் பாடலன்னு எனக்கு தெரியாது”.. ஆனா அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. சீனா, தானா பாடல் ரகசியா பகிர்ந்த சீக்ரெட்..!!

By admin on ஐப்பசி 13, 2023

Spread the love

பிரபல கிளாமர் நடிகையான ரகசியா வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் சீனா, தானா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதனை தொடர்ந்து ரகசியா பரமசிவன், யாரடி நீ மோகினி உள்ளிட்ட பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.

   

சமீபத்தில் ரகசியா அளித்த பேட்டியில் கூறியதாவது, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம் பெற்ற சீனா தானா பாடல் சூட்டிங்கிற்க்கு சென்றபோது அது ஐட்டம் சாங் என்பதே எனக்கு தெரியாது. நான் அணிந்திருந்த உடை கூட நான் தான் தேர்ந்தெடுத்தேன். முதலில் அவர்கள் கொடுத்த உடை எனக்கு பிடிக்கவில்லை. என்னை போலவே பிற கலைஞர்களும் உடை அணிந்து இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.

   

 

அந்த பாடலில் நான் சிம்பிளாக ஆயில், காஜல் ஆகியவற்றை வைத்து மேக்கப் போட்டிருந்தேன்.  சென்சிட்டிவான ஸ்கின் என்பதால் நானே மேக்கப் போட்டேன். தினேஷ் மாஸ்டரை எனக்கு ரொம்ப பிடிக்கும். சீனா, தானா பாடலில் எனது உடை மற்றும் மேக்கப் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது என கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)