விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. ஏற்கனவே ஆறு சீசன்களை வெற்றிகரமாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்துள்ளது. தற்போது ஏழாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. முந்தைய சீசனை போலவே இந்த சீசனிலும் சண்டை, விவாதம் என களை கட்ட ஆரம்பித்து இருக்கின்றது.

ரசிகர்களும் இந்த சீசனுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் வனிதாவின் மகளான ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோவிகா மற்றும் விசித்திரா இருவருக்கும் இடையில் ஒரு வாக்குவாதம் வந்தது. அந்த வாக்குவாதம் இணையத்தில் ட்ரெண்டானது.

அதில் அவர் தான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததாகவும், அதற்கு பிறகு தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் நின்றுவிட்டதாக கூறினார். அதற்கு விசித்திரா என்னதான் இருந்தாலும் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கலாம் என்று அறிவுரை வழங்க என்னோட படிப்பு பற்றி நீங்கள் பேச வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இது சண்டையாக முற்றி வைரலானது. இது தொடர்பான ட்ரோல் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் அம்மா மற்றும் பையன் இருவரும் இணைந்து ஜோவிகா பேசிய வார்த்தைகளை வைத்து அழகாக வீடியோ ஒன்றை செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
ரெண்டு பேரும் 😂😂😂👌👌 pic.twitter.com/zYeWkS3Laq
— Second Show (@SecondShowTamil) October 10, 2023
