சினிமா நடிகைகளுக்கு இணையாக சமீபத்தில் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர் ஆவார். முன்னதாக பணிமலர் ஒரு சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட பனிமலர் பன்னீர்செல்வம் திருமணமாகி கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் பனி மலரும் ஒருவர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பனிமலர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

மேலும் youtube உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சமையல் வீடியோக்கள், அழகு குறிப்புகள், ஆடை தேர்வு பற்றிய ஆலோசனைகளை பணிமலர் வழங்கி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் பனிமலர் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

